இலங்கையின் நெருக்கடியினை தீர்ப்பதற்கு இந்தியா உதவுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது குறித்து ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நிலையில் அண்டைய நாடான இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒருமித்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது