தலைவனாக சவாலை ஏற்று அணியை முன்னிருந்து வழிநடத்த விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தான் இரண்டு உலகக் கோப்பைகளை வெல்லுவதே தனது முக்கிய குறிக்கோள் என்று கூறிய பாகிஸ்தான் தலைவர் பாபர் அசாம், அணி அதைச் சாதித்தால் தனது ஓட்டங்கள் தங்கத்திற்கு மதிப்பாகும் என்றும் கூறினார். ஒரு இளைஞனாக தனது நாட்டிற்காக விளையாடுவதும், அணி அனைத்து கிண்ணத்தை வெல்லுவதும் தனது கனவு என்று பாபர் தெரிவித்துள்ளார்.
பாபர் மேலும் கூறுகையில்,
தலைவனாக சவாலை ஏற்று அணியை முன்னணியிலிருந்து வழிநடத்த விரும்புவதாகவும், மேலும் ஓட்டங்களை எடுக்க சக வீரர்களை ஊக்குவிக்கவும் விரும்புவதாகவும் கூறினார். புதிய தசாப்தத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அசாம், தலைவனாக முக்கியமானதாக கருதும் தனது பினிஷிங் திறமையை மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் ODI உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும்.நான் என் ஆட்டத்தை ரசிக்கிறேன் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த போர்முடன், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வதே எனது முக்கிய குறிக்கோள், அது நடந்தால் எனது ஓட்டங்கள் தங்கத்திற்கு மதிப்புள்ளவை என்று நான் உணருவேன், ”என்று அசாம் கூறினார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் கடைசியாக 2009 இல் இலங்கையை இறுதிப் போட்டியில் வீழ்த்தி டி 20 உலகக் கோப்பையை வென்றது.நான் ஒரு பள்ளி மாணவனாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது, பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே இலக்காக இருந்தது, அது எனது அணி அனைத்து கிண்ணத்தையும் வெல்ல உதவும் வகையில் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரனாக மாற வேண்டும், ”என்று அசாம் கூறினார்.
பாகிஸ்தான் தலைவர் பாபர் தனது சிறு பருவத்திலிருந்தே கிரிக்கெட் மீது “பைத்தியம்” என்று கூறினார். மேலும் விளையாட்டின் மீதான அவரது காதலை கவனித்த அவரது தந்தை அவருக்கு ஆதரவு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.87 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் மற்றும் 19 அரைசதங்கள் பெற்றுள்ள அசாம், ODIகளில் துடுப்பாட்டத்தில் 60 சராசரியாக உள்ளார்.
2022 இல், அவர் 100 க்கு அருகில் சராசரியாக 457 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் கடந்த ஆறு ஆட்டங்களில் மூன்று சதங்கள் அடங்கும். “நான் ஓட்டங்களல எடுத்தால், மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அதனை பார்த்து பின்தொடர்ந்து உத்வேகம் பெறுவார்கள், ஆனால் முன்னேற்றத்திற்கு எப்போதும் இடமிருக்கும், அதனால் நான் எனது பினிஷிங்கை மேம்படுத்த விரும்புகிறேன், அது தலைவனாக முக்கியமானது” என்று 27 வயதான கிரிக்கெட் ஜாம்பவான் பாபர் அசாம் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.