பிரதமரின் முழுமையான உரை… (உள்ளே)

0
18

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

ரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். நாட்டிற்காக நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய பங்கு உள்ளது.

இங்கு எங்களது முதன்மையான கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் நாம் இந்நிலையிலிருந்து மீள முடியாது.

நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இது இரண்டு மூன்று நாட்களில் செய்து முடிக்கும் காரியம் அல்ல.

இந்த சவாலை அற்புதங்களால் செய்திட முடியாது. கோஷங்களிலிருந்து அல்ல. மந்திரத்தால் அல்ல. உணர்ச்சிகளால் அல்ல. புத்திசாலித்தனமாக சிந்திக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அவசியம்.

ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது.

தற்போதைய நெருக்கடியால் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் உலக மசகு எண்ணெய் விலை 40% வரை உயரும் என்று சிலர் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த பின்னணியில் எரிபொருளுக்கான கூப்பன் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரிக்க முடியாது.

எப்படியாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு 3300 மில்லியன் டொலர் எரிபொருளைத் தேடிக் கொள்ள வேண்டும்.

எரிவாயு இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

நாங்கள் தற்போது எரிவாயு இறக்குமதி செய்ய பலதரப்பு உதவி, உள்ளூர் நாணயம் மற்றும் இந்திய கடன்களைப் பயன்படுத்துகிறோம்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிவாயுவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

மேலும், அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும்.

நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இது.

பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தேவையில்லாமல் சிந்திப்பதையும் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

இந்த கடினமான மூன்று வாரங்களை பொறுமையாக எதிர்கொள்வோம்.

நமக்குத் தேவையான சில உணவுகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம்.

மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த காலப்பகுதியில் எங்கள் அறுவடை குறைந்துள்ளது.

இவ்வாறான நிலைமையை சிறுபோகத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளதுடன் அடுத்த பெரும் போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு இப்போதிருந்தே நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆனால் அந்த அறுவடை பெப்ரவரி 2023 இறுதியில் கிடைக்கும்.

அரிசியைப் பற்றி பார்த்தால், நம் நாட்டின் வருடம் ஒன்றிற்கான அரிசியின் தேவை 2.5 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும்.

ஆனால் எங்களிடம் 1.6 மில்லியன் மெட்ரிக் டொன் அரிசி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இந்த நிலை நெல் மற்றும் பல பயிர்களுக்கும் பொதுவானது. அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

நமது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டொலர் அளவில் செலவாகும்.

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் விவசாயத்தை உயர்த்த இரசாயன உரங்கள் தேவை. நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்களை இறக்குமதி செய்வதற்கு வருடத்திற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

ஒரு பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்ய வேண்டும். அல்லது பணம் மற்றும் முயற்சி விரயமாகி விடும்.

தற்போது நாட்டுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பல்வேறு சர்வதேச உதவி திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், பல்வேறு நாடுகளின் உதவிகளைப் பெறவும் திட்டமிடப்பட்டது.

மருத்துவம் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு அந்த குழுக்களும் நாடுகளும் கணிசமான ஆதரவை வழங்குவதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுகாதாரத்திற்காக பெரிய அளவிலான அந்நியச் செலாவணி எங்களுக்குத் தேவையில்லை.

அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here