நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஜூன் 9இல் திருமணம்

0
70

கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி எப்போது திருமணம் செய்வார்கள் என கேள்வியாய் இருந்தது. சமீபத்தில் அதற்கு விடை கிடைத்தது. ஒருவழியாக ஜூன் 9இல் திருமணம் செய்ய உள்ளனர்.

திருமணத்திற்கு முன்னதாக கோயில் கோயிலாக சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். இந்நிலையில் திருப்பதியில் நடைபெற இருந்த திருமணம் இப்போது சென்னையில் பிரம்மாண்டமாய் இந்த திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருமணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் கூறுகையில், ‛‛வருகிற ஜூன் 9இ ல் எங்களது திருமணம் சென்னையில் நடைபெறுகிறது.

இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. திருப்பதியில் தான் செய்ய நினைத்தோம். ஆனால் நிறையபேரை அழைத்து சென்று அங்கு நடத்த முடியாத சூழ்நிலையில் சென்னையில் நடத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here