16 வயது காதலியை கர்ப்பமாக்கி குறைப்பிரசவத்திற்கு காரணமான வயதான கல்லூரி மாணவன் பாடாங் பெசார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் சரணடைந்துள்ளார்.
சிலாங்கூரில் படித்து வந்த குறித்த மாணவனை எதிர்வரும் வியாழக்கிழமை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் ஷோக்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மேல்நிலைப் பள்ளி மாணவி பிரசவித்தது குறித்து மருத்துவ அதிகாரி புகார் அளித்ததையடுத்து, பொலீஸாரின். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண், ஜாலான் காக்கி புக்கிட், பெசேரியில் உள்ள ஒரு அறையில் தனது காதலனாக இருந்த சந்தேக நபருடன் பாலியல் உறவு வைத்திருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி பின்னர் ஒரு தனியார் கிளினிக்கில் சோதனை செய்ததைத் தொடர்ந்து ஏழு மாத கர்ப்பமாக இருப்பதைக் தெரிந்து கொண்டுள்ளதுடன். குழந்தை பிறக்கும் வரை குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை.