குகுசான் சட்டமன்ற உறுப்பினரான ரீனா ஸெயின் வாரிசான் கட்சியில் இருந்து வெளியேறி சபா ஹரப்பான் ரக்யாட் கட்சியில் இணைந்துள்ளார்.
வாரிசான் கட்சியின் தாம் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்வதுடன் அக் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் ரீனா கூறியுள்ளார்.
ரீனா இதற்கு முன் வாரிசான் கட்சியில் முக்கிய பல பதவிகளை வகித்து வந்துள்ளார்.
அதே வேளையில், ரீனா சபா ஹரப்பான் ரக்யாட் கட்சியின் இணைந்ததை அக் கட்சியின் தலைவர் லியூ ஹுன் பா உறுதிப்படுத்தியுள்ளார்.