இரு தடுப்பூசிகளையும் ஏற்றிய இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர்
தனிமையில்!

0
131

இங்கிலாந்தின் சுகாதார அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சஜிட் ஜாவிட் (Sajid Javid) வைரஸ் தொற்றுக்கு இலக்கா கியிருக்கிறார். மேலதிக பரிசோதனைகளின் முடிவை எதிர்பார்த்துள்ள அவர்
தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார் என்று தகவல்வெளியாகி உள்ளது.

அமைச்சர் ஜாவிட் கடந்த மார்ச்சிலும் பின்னர் மேயிலுமாக அஸ்ராஸெனகா தடுப்பூ
சிகளை இரு தடவை பெற்றிருந்தார்.

உடல் சோர்வை அடுத்தே அவர் தன்னை சுய வைரஸ் பரிசோதனைக்கு உட்பட்டுத் தினார் என்று அவரே கூறியுள்ளார். அவருக்குத் தொற்றின் அறிகுறிகள் மிக குறைவாக உள்ளன. “இரண்டு தடுப்பூசி களையும் ஏற்றியுள்ளதால் தொற்றின் அறிகுறிகள் மோசமாக இருக்கவில்லை” என்று அவர் தனது ருவீற்றர் வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். ஊசி ஏற்றாதவர்களை விரைவாக அதனைப் போட்டுக்கொள்ளுமாறு அவர் வேண்டு கோள்விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் வைரஸ் திரிபுகளது
தொற்றுக்கள் நாளாந்தம் அதிகரித்து
வருகின்றன. கடந்த வெள்ளியன்று
மட்டும் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பூரணமாகக் தடுப்பூசிகளைப் பெற்றுக்
கொண்டவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகுகின்றனர். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று நோயியலாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here