மக்களின் மனம் கவர்ந்த பாடகரான எஸ்பிபிக்கும் கொரோனா பாதித்துள்ளாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த சில நாட்களாக அசௌகரியமாக உணர்ந்தேன். லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்தது. நான் டெஸ்ட் செய்து கொண்டதில் எனக்கு மிக மிக மிக லேசான அளவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.